மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.
நடிகர் பேசில் ஜோசஃப் ‘பராசக்தி’ படத்தில் நடிக்கிறார். அதிரடி நடிகராக மலையாள சினிமாவில் முன்னிலை வகிக்கும் செளபின் சாஹிர், ஜோஜு ஜார்ஜ், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் `கூலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய கால்தடத்தைப் பதிக்கவிருக்கிறார் செளபின் சாஹிர்.
`ஜகமே தந்திரம்’ படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `ரெட்ரோ’ படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்திருக்கிறார்.
இதேபோல், விக்ரமுடன் `வீர தீர சூரன்’ படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். `வீர தீர சூரன்’ இம்மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

