பிரதீப் ரங்கநாதன் துடிப்பும் ஆற்றலும் மிக்க நடிகர் எனப் பாராட்டுகிறார் மலையாள நடிகை மமிதா பைஜு.
தற்போது ‘டியூட்’ படத்தில் இவருடன் இணைந்து நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.
“அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தயாரித்த நிறுவனம்தான், ‘டியூட்’ படத்தைத் தயாரிக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
“பிரதீப் நடித்த ‘டிராகன்’ படத்தின் வெற்றி என்னையும் வியக்க வைத்தது. அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தேன்.
“அந்த வாய்ப்பு இவ்வளவு விரைவாக அமையும் என கனவிலும் நினைக்கவில்லை.
“எங்கள் இருவரது ஜோடியும் நிச்சயம் தமிழ் ரசிகர்களால் பெரிதும் பேசப்படும்,” என்கிறார் மமிதா பைஜு.