இன்றைய தேதியில் அதிகமான படங்களில் நடிக்கும் நாயகிகளின் பட்டியலில் மலையாள நடிகையான மமிதா பைஜுவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.
அவர் பிரபலமாகக் காரணமாக இருந்த ‘பிரேமலு’ படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து கண்டிப்பாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
இதுகுறித்து அப்படத்தின் நிறுவனம் சார்பில் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டே படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால், படத்தின் நாயகன் நஸ்லென் கால்ஷீட் ஒதுக்கிவிட்ட நிலையில், நாயகி மமிதா பைஜுவின் கால்ஷீட் கிடைப்பதுதான் தொடர் சிக்கலாகவே இருக்கிறதாம்.
தமிழ், தெலுங்கு என மமிதா பரபரப்பாக பணியாற்றி வருவதே இதற்கு முக்கியக் காரணம். அடுத்த ஆண்டு இறுதிவரை புதுப்பட வாய்ப்புகளை ஏற்க முடியாத நிலை. ஆனாலும் ‘பிரேமலு-2’க்கு தேதிகளை ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்திருக்கிறாராம் மமிதா.