பெண் கதாபாத்திரமே இல்லாமல் ‘மனிதர்கள்’ என்ற தலைப்பில் புதுப் படம் ஒன்று உருவாகியுள்ளது.
ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, திரைக்கதையை அமைத்துள்ளனர்.
“எதார்த்தமான பாணியில், புது முகங்களைக் கொண்டு இப்படத்தை உருவாக்கி உள்ளோம்.
“ஐந்து நண்பர்கள் திடீரென பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஒரே இரவில் அவர்கள் சந்திக்கும் பதற்றமான அனுபவங்களை திரையில் விவரிக்கிறோம்,” என்கிறார் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா.
அனிலேஸ் எல் மேத்யூ இசையமைக்கும் இப்படம், அடுத்த மாதம் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.