‘மஞ்சணத்தி’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘மஞ்சணத்தி’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

படம்: சினி உலகம்

30 Oct 2026 - 2:25 pm

1 mins read

பரியேறும் பெருமாள் படத்தின்மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ், தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றிபெற்றன.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் ‘மஞ்சணத்தி’.

இப்படத்தில் கயாது லோஹர், பிரியங்கா மோகன், கதிர், விது, பூர்ணிமா ஆகியோர் நடிக்கின்றனர்.

‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“’மஞ்சணத்தி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த அற்புதமான நாள்களையும் மறக்க முடியாத அனுபவங்களையும் சாத்தியமாக்கிய அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்,” என அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்