நகைச்சுவை, சாகசம் நிறைந்த படமாக உருவாகும் ‘மரகத நாணயம்-2’

நகைச்சுவை, சாகசம் நிறைந்த படமாக உருவாகும் ‘மரகத நாணயம்-2’

1 of 2
படம்: சினிமா பிளஸ்.
படம்: இந்து தமிழ் திசை

14 Nov 2026 - 4:20 pm

1 mins read

கடந்த 2017ஆம் ஆண்டு திரைகண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவை, சாகசத் திரைப்படமான ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவன், ‘மரகத நாணயம்-2’ படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். நான்கு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

ஆதி, பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான வேடங்களை ஏற்றுள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

“சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என முதல் பாகம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

“முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் கதையில் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன்.

முதல் பாகத்தில் நிக்கி கல்ராணியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அதேபோல், இந்த இரண்டாம் பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக வடிவமைக்கப்பட்டுள்து என்றும் படம் திரைகாணும்போது அதை ரசிகர்கள் உணர்வார்கள் என்றும் இயக்குநர் சரவன் தெரிவித்துள்ளார்.

முதல் பாகத்தைப்போலவே நகைச்சுவை, அடிதடி, சாகசம் நிறைந்த பொழுதுபோக்குப் படமாக ‘மரகத நாணயம்-2’ உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்