இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சென்னையில்தான் கொண்டாடியுள்ளார் மீனாட்சி சௌத்ரி.
நவீன் பொலிஷெட்டியுடன் இவர் நடித்துள்ள தெலுங்குப் படம் பொங்கலையொட்டி வெளியாகிறது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய பின்னர் மதுரை சென்று மீனாட்சி அம்மனை வழிபடுவதே அவரது திட்டமாக இருந்துள்ளது. ஆனால் ‘ஜனநாயகன்’ பட வெளியீடு தள்ளிப்போனதால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகிவிட்டதாகப் புலம்புகிறார்.
எதிர்காலத்தில் சென்னையில் நிரந்தரமாக குடியேறுவதுதான் மீனாட்சியின் திட்டம்.
“ஹரியானாவில் வாழ்ந்தாலும் நான் ஒரு பெங்காலிப் பெண். பெங்காலி மக்களும் பொங்கல் வைப்பார்கள். பூசையின்போது கரும்பு மட்டும் இடம்பெறாது,” என்கிறார் மீனாட்சி சௌத்ரி.

