இயக்குநர் எஸ்பி முத்துராமன், பழம்பெரும் நடிகை எம்என் ராஜம் ஆகிய இருவருக்கும் தமிழக அரசு கலைத்துறை வித்தகர் விருதை அறிவித்துள்ளது.
இதையடுத்து இருவருக்கும் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 1949ஆம் ஆண்டு நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய எம்என் ராஜம், 1950, 60களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக பிரகாசித்தார்.
எம்ஜிஆர், சிவாஜி போன்ற அன்றைய முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தும் பெயர் வாங்கியவர் எம்என் ராஜம்.
இயக்குநர் எஸ்பி முத்துராமன் தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கியவர்.
கடந்த 1980-90களில் முன்னணி இயக்குநராக கோலோச்சிய இவர், தமிழில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
எம்என் ராஜம், எஸ்பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருதுடன் ரூ.10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் நினைவுப் பரிசும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

