‘சீதா ராமம்’ தெலுங்குப் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இந்தி நடிகை மிருணாள் தாக்குர்.
தற்போது இணையத் தொடர்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரிடம், ‘எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு யாரேனும் இந்தி நடிகர் ஒருவரது பெயரைக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ‘கமல்ஹாசனுடன் நடிக்க ஆசை’ என்று பதில் அளித்துள்ளார் மிருணாள்.
இதையடுத்து, ‘எந்த நடிகருடன் நடனமாட விரும்புகிறீர்கள்?’ என்ற கேள்விக்கும், இந்தி, தெலுங்கு நடிகர்களின் பெயரைக் குறிப்பிடாமல், மீண்டும் ‘கமல்ஹாசன்’ என்பதே அவரது பதிலாக இருந்தது.
“கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமல்ல, நடனத்திலும்கூட மற்றவர்களை ஓரங்கட்டிவிடுவார். அவர் அந்த அளவுக்கு திறமைசாலி,” என்றார் மிருணாள் தாக்குர்.
இவர் தற்போது ‘சன் ஆஃப் சர்தார்-2’, ‘எ லவ் ஸ்டோரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

