தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனவு நிறைவேறிவிட்டது: மாளவிகா மோகனன் பதிவு

1 mins read
bd84151d-30bf-46b1-889f-bcea3e1002b0
மோகன் லாலுடன் மாளவிகா மோகனன். - படம்: ஊடகம்

‘மாஸ்டர்’, ‘தங்கலான்’ படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகையாக முன்னேறி உள்ளார் மாளவிகா மோகனன்.

தற்போது மலையாளத்தில் நடிகர் மோகன் லால், இயக்குநர் சத்யன் அந்திகாட் இணைந்துள்ள ‘ஹிருதயப்பூர்வம்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ள அவர், தனது நீண்டகால கனவு ஒன்று நிறைவேறி உள்ளதாக சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“மோகன் லால், இயக்குநர் சத்யன் அந்திகாட் ஆகியோரின் படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். இப்போது அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

“என் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது. இந்த அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது.

“அறிமுகமில்லாத இரண்டு பேர் சந்தித்துப் பல விஷயங்களைப் பற்றி உரையாடி, பழகும், மனதை வருடும் கதைதான் இது.

“இப்படியான மனதை வருடும் படங்கள் எப்போதும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.

“இந்தப் படத்தில் நடித்த அனுபவங்களையும் நீங்கா நினைவுகளையும் எப்போதும் மனதில் பதிய வைத்திருப்பேன்,” என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்