தனது இசைப்பணிகளுக்கு மத்தியில், புதுப்பட தயாரிப்பிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் யுவன் சங்கர் ராஜா.
அவர் தயாரித்துள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் சுகுமார் இயக்க, ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யுவன், புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிப்பது தமது கனவு என்றார்.
“இப்படத்துக்காக முதலில் அறிமுகக் காணொளி ஒன்றை வெளியிட்டோம். அதன் பிறகு சில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பி வருவதற்குள் மொத்த படத்தையும் முடித்துவிட்டனர்.
“முழு படத்தையும் பார்த்தபோது நன்றாக இருந்தது. இதனால் ஏற்பட்ட உற்சாகத்தில் மேலும் இரண்டு பாடல்களைச் சேர்த்துள்ளோம். இந்தப் படம் இயக்குநரின் கனவு.,” என்றார் யுவன் சங்கர்.
‘ஸ்வீட்ஹார்ட்’ படம் மார்ச் 14ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.