காவல்துறை அதிகாரி வேடம் என்றால் கதாநாயகர்கள் மட்டுமல்ல, நாயகிகளும் உற்சாகமாகிவிடுகிறார்கள்.
‘கோட்’ பட நாயகி மீனாட்சி சௌத்ரியும் இந்த உற்சாகப் பட்டியலில் இணைந்துள்ளார்.
தெலுங்கில் நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து நடிக்கும் படத்தில் இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
“முதன்முறையாக காவல் அதிகாரியாக நடித்துள்ளேன். இப்படத்தில் சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல், நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறேன். இனிமேல் இதேபோல் சுவாரசியமான கதாபாத்திரம் அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன்,” என்கிறார் மீனாட்சி சௌத்ரி.