நடிகை நயன்தாரா தற்போது தெலுங்குப் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
தமிழில் முன்னணி நாயகியாக வலம்வரும் இவர், அவ்வப்போது தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடிப்பதுண்டு.
இந்நிலையில், சிரஞ்சீவியுடன் இணைந்து ‘மன சங்கர வரபிரசாத் காரு’ என்ற படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், முதன்முறையாக இப்படத்தின் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட காணொளியில் அவர் பேசியுள்ளார்.
இப்படம் அடுத்த சில நாள்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நயன்தாரா இடம்பெற்றுள்ள காணொளி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, இப்படத்தின் அறிமுகக் காணொளியிலும் நயன்தாரா தோன்றி கருத்தைப் பகிர்ந்திருந்தார். இப்போது அடுத்த காணொளியும் வெளியாகி இருப்பது தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தாம் நடிக்கும் தமிழ்ப் படங்களின் விளம்பர நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு தராத நயன்தாரா, தெலுங்கில் மட்டும் இவ்வாறு செயல்படுவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

