தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்தை அனில் ரவிப்புடி இயக்குகிறார்.
இதற்கு முன்பு சிரஞ்சீவி நடித்த ‘விஷ்வம்பரா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா.
மீண்டும் அதே ஜோடியை நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்த இயக்குநர் அனில் ரவிப்புடி, நயன்தாராவை நடிக்கும்படி கேட்டு அணுகினார்.
ஆனால், நயன்தாரா தரப்பில் 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகத் தகவல்.
பதறிப்போன தயாரிப்புத் தரப்பு, வேறு கதாநாயகியைப் பரிசீலிக்க முடிவு செய்த நிலையில், நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிரஞ்சீவியும் கூறினாராம்.
காற்று நயன்தாரா பக்கம் வீசியதால், அவர் ஒன்றிரண்டு கோடிகளைக் குறைத்துக்கொள்ள, கிட்டத்தட்ட அவர் கேட்ட தொகையைச் சம்பளமாக வழங்க முன்வந்துள்ளது தயாரிப்புத் தரப்பு.

