பஞ்சாப்பில் இருந்து தமிழுக்கு வந்த புது நாயகி

பஞ்சாப்பில் இருந்து தமிழுக்கு வந்த புது நாயகி

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

06 Nov 2026 - 3:56 pm

1 mins read

தமிழ்த் திரையுலகில் வடமாநிலங்களைச் சேர்ந்த புதிய கதாநாயகிகள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான்.

காஜல் அகர்வால், சோனியா அகர்வால், சாக்‌ஷி அகர்வால் எனத் தமிழ்ச் சினிமாவில் முத்திரை பதித்த பல அகர்வால்களின் வரிசையில், தற்போது பஞ்சாப்பில் இருந்து மற்றொரு புதுமுகமாக தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார் நடிகை ஷெர்ரி அகர்வால்.

ஏற்கெனவே பஞ்சாபி, தெலுங்குத் திரையுலகில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள இவர், தற்போது ‘சைக்கிள் கேப்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், படத்தயாரிப்பாளரும் நடிகருமான நவாசுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

முன்னதாக, தெலுங்கில் ‘ஏப்ரல் 28 ஏம் ஜரிகிந்தி’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய படங்களிலும் கன்னடத்தில் ‘ஆகர்ஷிதா’, இந்தியில் ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபேக்’ உள்ளிட்ட படைப்புகளிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார் ஷெர்ரி.

தமிழில் அறிமுகமாவது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“ஒரு நடிகையாக ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாத பல நல்ல நினைவுகளை எனக்குக் கொடுத்துள்ளது. படப்பிடிப்புத்தளம் முழுவதும் நேர்மறையான சூழல் நிறைந்திருந்ததுடன், படக்குழுவினர் அனைவரும் மிகவும் இனிமையாகப் பழகினர்.

“1990களின் காதலில் அமைந்த அப்பாவித்தனமும் இனிய இசையும் கலந்த உணர்வுபூர்வமான கதைக்களமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மனங்களையும் நிச்சயம் தொடும் ஒரு திரைப்படமாக இது இருக்கும்,” எனத் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஷெர்ரி.

குறிப்புச் சொற்கள்