நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 173வது படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க, ‘டியூட்’ திரைப்பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைப்பில், சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் 2027 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு சிறப்புக் காணொளி ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்த் தனது வழக்கமான ஸ்டைலுடனும் கம்பீரத்துடனும் நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் இத்திரைப்படத்தின் பின்னணி இசை, சுவரொட்டிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


