இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள படம் ‘டிஎன்ஏ’.
விமர்சகர்களின் பாராட்டை அடுத்து ரசிகர்களிடம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நாயகி நிமிஷா சஜயன், இந்தப் படம் வெற்றிபெறும் என நூறு விழுக்காடு உறுதியாக நம்பியதாகத் தெரிவித்தார்.
“பொதுவாக நான் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது ஒருவித பயம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு அப்படி எதுவும் இல்லை. நான் நன்றாக நடித்திருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள். அந்தப் பாராட்டு இயக்குநரைத்தான் போய்ச்சேர வேண்டும்.
“அதர்வா திறமையான நடிகர். மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார். அதர்வா இல்லையென்றால் நான் ஏற்று நடித்த திவ்யா கதாபாத்திரம் முழுமை அடைந்திருக்காது.
“படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றிக்கு படக்குழுவிலுள்ள ஒவ்வொருவரும் காரணம்,” என்றார் நிமிஷா சஜயன்.

