தற்போது தாம் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகக் கூறுகிறார் இளம் நாயகி மிருணாள் தாக்கூர்.
அவர் அண்மையில் நடித்த ‘டகாய்ட்’ படம் வெளியாகி, நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு தயங்காமல் பதிலளித்தார் மிருணாள்.
குறிப்பாக, காதல் தொடர்பான கேள்விக்கு அளித்த பதிலில், தற்போதைய சூழலில், காதலுக்கு எனத் தம்மால் நேரம் ஒதுக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.
“காதலிக்க நேரமில்லை என்று நான் கூறுவதை நீங்கள் வழக்கமான, ஒப்புக்கு கூறும் பதிலாகக் கருதலாம். அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. சில விஷயங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதே உண்மை,” என்று கூறியுள்ளார் மிருணாள்.

