முடங்கிக் கிடந்த ‘நூறு கோடி வானவில்’ முகம் காட்டுகிறது

முடங்கிக் கிடந்த ‘நூறு கோடி வானவில்’ முகம் காட்டுகிறது

படம்: தினமணி

30 Oct 2026 - 12:56 pm

1 mins read

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.

பின்னர் ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சசி இயக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமான ‘நூறு கோடி வானவில்’ நிதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போதுவரை வெளியாகவில்லை.

அப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் சித்தி இத்னானி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், அப்படத்தின் சுவரொட்டியை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். அதனுடன் படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் திரையரங்கத்தில் வெளியாவதற்குப் பதில் நவம்பர் 6ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் புதிய முன்னோட்டக் காட்சியும் வியாழக்கிழமை (அக்டோபர் 29) வெளியிடப்பட்டது. சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்