அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் குறு முன்னோட்டக்காட்சித் தொகுப்பு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்தப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே கூறப்பட்ட நிலையில், தீபாவளி விருந்தாக படத்தின் டீசர் வெளியாவது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இதுவரை இப்படத்தின் சுவரொட்டிகள் மட்டுமே வெளியாகி இருந்தன. இதற்கிடையே, இப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.