துல்கர் சல்மானின் படத்தை வெளியிட தடைகோரி மனு

1 mins read
73b28a9a-040d-4e20-9207-aa390a55b626
துல்கர் சல்மான் நடித்திருக்கும் ‘காந்தா’ படத்தின் சுவரொட்டி. - படம்: இந்திய ஊடகம்

துல்கர் சல்மான் நடித்திருக்கும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘காந்தா’ படத்தை வெளியிடத் தடை கோரி மனு அளித்துள்ளார் அவரின் மகள் வழிப் பேரன்.

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் இறுதியாக நடித்து வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்ததாக துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படப் புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

இந்நிலையில் ‘காந்தா’ திரைப்படத்துக்குத் தடை கோரி பாகவதரின் மகள் வழிப் பேரன் மனு அளித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘காந்தா’ படத்தை, எடுப்பதற்கு முன் அவரின் சட்டபூர்வ வாரிசுகளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பாகவதரின் மகள் வழிப் பேரன் மனு அளித்துள்ளார். இந்த மனுவிற்கு தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்