ஆறுதல் தரும் நண்பர்களின் தொலைபேசி அழைப்புகள்

1 mins read
5e885705-5ea7-4f19-9e76-2ead44fd27a8
சிவராஜ் குமார், தனுஷ். - படம்: ஊடகம்

கன்னட நடிகர் சிவராஜ் குமார் தீவிர சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோயில் இருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டார்.

ஆனாலும் அமெரிக்காவில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஓய்வில் இருக்கவேண்டும், மருத்துவக் கண்காணிப்பு தொடரவேண்டும் என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

எனவே, இப்போதைக்கு அவர் புதுப்படங்கள் எதையும் ஏற்கவில்லை. சிவராஜ் குமாருடைய நெருங்கிய நண்பர்களில் தனுஷும் ஒருவர். அவர் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசி நலம் விசாரிக்கிறாராம்.

நண்பர்கள் சிலர் இதுபோன்று விசாரிப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாகச் சொல்கிறார் சிவராஜ் குமார்.

குறிப்புச் சொற்கள்