நடிகை பூஜா ஹெக்டே கடந்த நான்கு நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம்வருபவர் பூஜா. நாயகியாக நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் பெறும் இவர், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடக்கூட பெரும் தொகை பெறுகிறார். அண்மையில்கூட, ‘கூலி’ படத்தில் இவர் நடனமாடிய ‘மோனிகா’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பூஜா ஹெக்டே குறித்து எந்தத் தகவலும் இல்லை. வழக்கமாக சமூக ஊடகத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் பூஜா, எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை.
இதனால் அவருக்கு என்ன ஆனது எனத் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி, கவலைப்பட்ட நிலையில், ஒரேயொரு பதிவைப் போட்டுள்ளார் பூஜா.
அதில், தனக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் வீட்டில் ஓய்வெடுப்பதாகக் குறிப்பிட்டு, ஒரு போர்வையைப் போர்த்தியபடி, கையில் தனது நாய்க்குட்டியுடன் காணப்படும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.