சாம் ஆண்டன் இயக்கும் புதுப் படத்தில் பிரபுதேவாவும் வடிவேலும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’, ‘டார்லிங்’, ‘100’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சாம் ஆண்டன்.
இந்நிலையில், துபாயைச் சேர்ந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி என்பவருக்கு சாம் ஆண்டன் கூறிய கதை பிடித்துப் போனதால், அதைத் திரைப்படமாக்க முன்வந்துள்ளார்.
பிரபுதேவா, வடிவேலு கூட்டணி, ‘காதலன்’, ‘எங்கள் அண்ணா’, ‘மனதை திருடிவிட்டாய்’ எனப் பலப் படங்களில் இணைந்து நடித்துள்ளது.
அப்படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில், பிரபுதேவா இந்தித் திரையுலகில் வெற்றி இயக்குநராக உருவெடுத்தார். அதனால் சில ஆண்டுகள் அவர் இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.