இளம் நடிகை பிராத்தனா நாதனின் நடிப்புக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, மணிமேகலை, ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்டோருடன் பிராத்தனாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 15ஆம் தேதி வெளியான இப்படத்தில், கல்யாண வீட்டில் பந்தா செய்யும் மணமகளாக நடித்திருந்தார் பிராத்தனா. அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
“நான் இடம்பெற்றுள்ள காட்சிகளில் எனது நடிப்பு தனித்துவமாக இருந்ததாகப் பலரும் பாராட்டுகிறார்கள்.
“மேலும், இதுதான் என்னுடைய முதல் படம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் நான் ஏற்கெனவே ‘லவ் டுடே’, ’பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன்.
“ஆனால், ரசிகர்களின் கவனம் இப்போதுதான் என் பக்கம் திரும்பியுள்ளது,” என்கிறார் பிராத்தனா.
தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் பிராத்தனாவின் விருப்பம்.

