தனுஷ் பட வாய்ப்பு: நன்றி தெரிவித்த பிருத்வி ராஜன்

1 mins read
c7aa9ce3-663a-4ff7-9cd3-1c8dea3ff195
பிருத்வி ராஜன். - படம்: ஊடகம்

தனுஷ் நடிப்பில் உருவாகும் 54வது படத்தின் பூசை சென்னையில் நடைபெற்றது.

‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கும் இதில், மமிதா பைஜு கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்த இயக்குநர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி ராஜன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“புது நாள், புது வாய்ப்பு. தனுஷின் ‘டி54’ படத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

“எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார் பிருத்வி ராஜன்.

குறிப்புச் சொற்கள்