தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கத்தார் நாட்டு அரசு விருது அளித்து கௌரவித்துள்ளது.
‘புஷ்பா-2’ படத்தில் நடித்ததற்காக, ஏற்கெனவே தெலுங்கானா மாநில அரசு அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகர் விருதை அறிவித்தது. தற்போது கத்தார் நாட்டு அரசு விருதையும் அவர் பெற்றுள்ளார்.
தெலுங்கு திரைப்படங்களின் சிறப்பைக் கொண்டாடும் வகையில், கத்தார் - தெலுங்கானா திரைப்பட விழாவில் அல்லு அர்ஜுனுக்கு விருது அளிக்கப்படும்.
இவர் ஏற்கெனவே இரண்டு நந்தி விருதுகள், மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர். இதற்கிடையே, அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதுப் படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படத்தில் மொத்தம் ஆறு கதாநாயகிகள் உள்ளனராம். எனினும், கதைப்படி ஆறு பேருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக உறுதி அளித்துள்ளாராம் அட்லீ.
இந்தப் படத்துக்கு ‘ஐகான்’, ‘சூப்பர் ஹீரோ’ என இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றை அல்லு அர்ஜுன் தேர்வு செய்வார் எனக் கூறப்படுகிறது.

