ராஜமௌலி - மகேஷ் பாபு இணையும் ‘வாரணாசி’

1 mins read
201f4656-b9ab-4026-bce2-4964c0d293ca
(இடமிருந்து) பிரியங்கா சோப்ரா, ராஜமௌலி, மகேஷ் பாபு. - படங்கள்: ஊடகம்

இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு இணைந்துள்ள படத்தின் சுவரொட்டி வெளியீட்டு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் இது.

அப்படம் காசியின் வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட படிப்பிடிப்பு ஒடிசாவிலும் அடுத்ததாக ஹைதராபாத்திலும் நடந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அப்படத்திற்கு ‘வாரணாசி’ எனப் படக்குழு பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், அப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை நவம்பர் 15 ஆம் தேதி வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நிகழ்ச்சியை நடத்தவும் அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்துள்ளதாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்