மணிகண்டனை இயக்கும் தேசிங்கு

1 mins read
791a1be1-645d-4cd6-a45b-96da6647122a
தேசிங்கு பெரியசாமி, மணிகண்டன். - படம்: எக்ஸ்.காம்

‘குடும்பஸ்தன்’ பட நாயகன் மணிகண்டன் அடுத்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்க உள்ளார். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பல வாய்ப்புகள் தேடி வந்தாலும், தேசிங்கு பெரியசாமி எதையும் ஏற்கவில்லை. அவர் ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாகவும்கூட பேசப்பட்டது.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு சிம்புவை வைத்து வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக ஓர் அறிவிப்பு வெளியானது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர், ‘இதற்கு மேல் தாங்காது’ என்று முடிவெடுத்த தேசிங்கு பெரியசாமி, குறைந்த செலவில், குறுகிய காலத்தில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் மணிகண்டன் நாயகனாக நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இணைந்துள்ளார் என்பதே அண்மையத் தகவல்.

குறிப்புச் சொற்கள்