‘அமரன்’ படத்தின் வெற்றியை அடுத்து, இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் இயக்குநராக மாறியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இந்திப்பட வாய்ப்புகளும் தேடி வருகின்றனவாம்.
சோனி பிக்சர்ஸ் அவரை வைத்து புதுப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது. இதுவும் ராணுவப் பின்னணியில் உருவாகும் படம்தானாம்.
கதாநாயகனாக சல்மான்கான் அல்லது அக்ஷய் குமார் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ராஜ்குமார் பெரியசாமி விரைவில் மும்பை செல்வார் என்றும் அங்கு சல்மான், அக்ஷய் குமார் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து கதை சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

