சீனாவிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ராமாயணா’

சீனாவிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ராமாயணா’

1 mins read
6ca15cd7-c597-479e-bbad-9e80374d468f
‘ராமாயணா’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினிமா தினமலர்
Google News Preferred Icon

பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தை உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் இந்த இதிகாசத் திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 6ஆம் தேதி அதனைத் திரைக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அனைத்துலக விநியோக உரிமையை ஹாலிவுட் நிறுவனமான சோனி பிக்ஸர்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்தியத் திரைப்படங்களுக்குச் சீனாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அதை மனத்தில் கொண்டு, இப்படத்தைச் சீனா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இதுவரை சீனாவில் வெளியான எந்தவோர் இந்தியப் படத்தை விடவும், அதிகமான திரையரங்குகளில் ‘ராமாயணா’ திரையிடப்படவுள்ளது.

வெளிநாடுகளில் வெளியாகும் அதே நாளில் இந்தியாவிலும் படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியாகி புதிய சாதனை படைக்க ‘ராமாயணா’ தயாராகி வருகிறது என்று அப்படக்குழுவினர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்