நடிகை மமிதா பைஜு சிறந்த நடிகையாக வருவார் என்று தாம் முன்பே கணித்துவிட்டதாகக் கூறியுள்ளார் நடிகை ரஜிஷா விஜயன்.
இவரும் மமிதாவும் கடந்த 2020ல் ‘கோ கோ’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது மமிதாவின் சுறுசுறுப்பையும் துடிப்பான நடிப்பையும் கண்டு தாம் அசந்து போனதாகச் சொல்கிறார் ரஜிஷா.
“அப்போதே பின்நாள்களில் மமிதா முன்னணி நாயகியாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்று பலரிடம் கூறியிருந்தேன். அப்போது யாரும் அதை நம்பவில்லை. ஆனால், நான் சொன்னதுதான் நடக்கிறது.
“திரையுலகில் மமிதா மிகப்பெரிய உயரங்களைத் தொடுவார்,” என்று பாராட்டியுள்ளார் ரஜிஷா விஜயன்.
இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமிதா, அடுத்து சூர்யா படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

