இதோ, அதோ என்று இழுத்தடித்து வருகிறார்களே தவிர, இதுவரை தங்களுடைய திருமணம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. நானும் விஜய்யும் திருமணம் குறித்து எதையும் மறைக்க விரும்பவில்லை.
“நேரம் வந்தால் அது குறித்து கண்டிப்பாக விவரம் தெரிவிப்போம். அதேசமயம் திருமணம் குறித்த தகவல்களை நான் இப்போது உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.
மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் திரைப்பணிகள் குறித்து எதுவுமே பேச மாட்டாராம். வீட்டிலும்கூட பெரும்பாலும் சினிமா குறித்துப் பேசுவதைத் தவிர்த்துவிடுவாராம்.
“என் பணி சார்ந்த ஏதேனும் ஒரு விஷயம் மனத்தில் சுமையாக இருந்தால் மட்டும் விஜய்யிடம் ஆலோசனை கேட்பேன். பொதுவாகவே நான் எந்த வேலையைச் செய்தாலும் அதற்காக நூறு விழுக்காடு உழைப்பேன். இந்த அர்ப்பணிப்பும் உண்மையும் இருப்பதால் என் பணி குறித்து யாரிடமும் தேவையின்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை,” என்று கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

