ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
அண்மைக் காலமாக அவருக்குப் பல இந்திப் பட வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அதனால் தனது ஊதியத்தைப் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டதாகத் தெரிகிறது.
அது மட்டுமல்ல, நடிப்பதற்கு ஒதுக்கும் தேதிகளையும் (கால்ஷீட்) குறைத்துவிட்டாராம்.
தனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே அவர் நடிக்க முன்வருவதாகக் கூறப்படுகிறது.
அவரது நடிப்பில் ‘காக்டெயில்’, ‘மைசா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ரூ.13 கோடி வரை கேட்பதற்கும் திட்டமிட்டுள்ளாராம்.

