தாம் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவைக் காதலிப்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இருவரும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றனர், தீபாவளிப் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடினர் எனப் பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர், உங்களுக்கான மாப்பிள்ளை சினிமா துறையைச் சேர்ந்தவரா, வெளியில் உள்ளவரா என்று கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த ராஷ்மிகா, இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே எனக் கூற, அதைக்கேட்டு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பட நாயகன் அல்லு அர்ஜுன், நடிகை ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் ரசித்துச் சிரித்தனர்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.