உடற்பயிற்சியின்போது காலில் காயம்பட்டு, ஓய்வெடுத்து வந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
சில நாள்கள் ஓய்வெடுத்த பின்னர், இப்போது முழுமையாகக் குணமடைந்துவிட்டாராம்.
பழையபடி உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று தீவிர உடற்பயிற்சி செய்து, ஏறிய உடல் எடையைக் குறைத்துவிட்டதாகத் தகவல்.
தற்போது தனுஷுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா இடம்பெறும் பாடல் காட்சியைப் படமாக்க மொத்த படக்குழுவும் காத்திருக்கிறது. மிக விரைவில் அதற்கான படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே, ‘உங்களுக்கு அடிபட்டுவிட்டதா, இப்போது எப்படி இருக்கிறீர்கள்’ என இவரிடம் ஏராளமான ரசிகர்களும் நட்பு வட்டத்தில் இருப்பவர்களும் தினந்தோறும் விசாரித்தது தன்னை நெகிழ வைத்துள்ளதாகச் சொல்கிறார் ராஷ்மிகா.
“ரசிகர்களின் இந்த விலைமதிப்பிலாத அன்புதான் என்னை விரைவாகக் குணமடையச் செய்தது,” என்றும் நெருக்கமானவர்களிடம் கூறுகிறாராம்.