கதாநாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என எதுவாக இருந்தாலும் ஏற்று நடிக்க ரெஜினா கசாண்ட்ரா தயங்குவதில்லை. ஒரு நிமிடம் திரையில் தோன்றினாலும் தனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்பது மட்டுமே அவரது நிபந்தனையாக உள்ளது.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு, இந்தியிலும் நல்ல கதைகளுடன் கூடிய பட வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம்.
இந்தியில், சன்னி தியோலுடன் நடித்த ‘ஜாத்’, அக்ஷய் குமாருடன் நடித்த ‘கேசரி-2’ ஆகிய படங்களில் ரெஜினா நடித்த கதாபாத்திரங்களுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே, இந்தியில் தொடர்ந்து நடிப்பதென முடிவு செய்துள்ளாராம். ரெஜினா எதிர்பார்த்ததைவிட இந்தியில் அதிக சம்பளம் கிடைப்பதாகத் தகவல்.

