தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திப் படத்தின் மறுபதிப்பில் ராகவா லாரன்ஸ்

1 mins read
4c115b81-a546-4da0-88bf-15989f04be1d
ராகவா லாரன்ஸ். - படம்: ஊடகம்

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்து ‘அதிகாரம்’, ‘துர்கா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவை அடுத்தடுத்து வெளீயிடு காணும் நிலையில், இந்தியில் வெளிவந்த ‘தில்’ என்ற படத்தின் மறுபதிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த இப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இரண்டிலும் ராகவா லாரன்ஸ்தான் கதாநாயகனாக நடிக்கிறார்.

இது அவருக்கு 25வது படமாகும். எனவே மிக பிரம்மாண்டமான படைப்பாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்