தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவர்ச்சிக் காட்சிகள் நீக்கம்: கியாரா கோபம்

1 mins read
f9e52aa3-291c-416b-94f5-89b7ee9583d9
கியாரா அத்வானி. - படம்: ஊடகம்

‘வார்-2’ படத்தில் கியாரா அத்வானி நடித்துள்ள கவர்ச்சிக் காட்சிகளை படத் தணிக்கையின்போது நீக்கிவிட்டனர். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல். ஜூனியர் என்டிஆரும் கியாரா அத்வானியும் இணைந்து நடித்துள்ள ‘வார்-2’ என்ற படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் நிறைய கவர்ச்சிக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் சிலர் கூறியிருந்தனர். இதையடுத்து, ஆபாசக் காட்சிகளை நீக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களில் சிலர் குரல்கொடுத்து வந்தனர்.

குறிப்பாக, ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடை அணிந்தபடி, வலம் வரும் காட்சிகளில், கியாரா அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டியிருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, தணிக்கைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், படம் பார்த்த தணிக்கைக்குழு, அக்குறிப்பிட்ட பாடல் காட்சியில் ஏறக்குறைய பத்து வினாடிகள் வரக்கூடிய காட்சிகளை நீக்கியுள்ளனர். இதையறிந்த கியாரா கடுப்பாகிவிட்டாராம்.

“இதைவிட மோசமான, ஆபாசமான பாடல் காட்சிகள் இந்திப் படங்களில் இடம்பெற்றுள்ளன. ஆனால், நான் நடித்த பாடல் காட்சி மட்டும் ஒரு தரப்பினருக்கு ஆபாசமாகத் தெரிகிறது.

“இதை எப்படி ஏற்பது? ஏற்கெனவே வெளியான கவர்ச்சிப் பாடல்களை என்ன செய்வார்களாம்?,” என்று கேட்கிறார் அவர்.

குறிப்புச் சொற்கள்