மதுரை: அரிட்டாப்பட்டியைச் சூழலியல் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்கக்கோரி மதுரை ஆட்சியரிடம் அம்மாவட்ட விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமான அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி தரக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுபோல், தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாப்பட்டி பகுதியைப் பாதுகாக்கப்பட்ட சூழலியல் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

