இணையத்தொடரை இயக்கும் ரேவதி

1 mins read
487a378d-e9b4-408e-bae7-1b293ea86dc5
ரேவதி. - படம்: ஊடகம்

நடிகை ரேவதி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்துக்கொண்டே வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் படங்களை இயக்கவும் செய்கிறார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ‘மீடிர் மை ஃபிரண்ட்’ என்ற படத்தை இயக்கி, பரவலான பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார் ரேவதி.

இதையடுத்து, ‘சலாம் வெங்கி’ என்ற இந்திப் படத்தை இயக்கிய ரேவதி, பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் இணையத் தொடரை ரேவதி இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருவதாக ரேவதியும் தெரிவித்துள்ளார். இது நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரின் இணை இயக்குநராக சித்தார்த் ராமசாமி பணியாற்றவுள்ளதாக ரேவதி அவரது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்