தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கதாநாயகனாக மாறிய ரோபோ சங்கர்

1 mins read
1c0c3986-2893-49f5-b16f-ec66eff6cb78
‘அம்பி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

கல்லீரல் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார் ரோபோ சங்கர். மீண்டும் பல படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் ‘அம்பி’ என்ற படத்தில் அவரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடிக்கிறார்.

டி2 மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.பி.முரளிதரன் இசையமைக்கும் இப்படம் நகைச்சுவையுடன் கூடிய குடும்பப் படமாக உருவாகி வருவதாகச் சொல்கிறார் ரோபோ சங்கர்.

குறிப்புச் சொற்கள்