‘டாக்சிக்’ படத்தைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய இருமொழிப் படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
அப்படத்தில் தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிமுகக் காணொளியில், ருக்மணி வசந்த் ‘தாரா’ என்ற நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் அப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ருக்மணி வலியுறுத்துவதாக வெளியான தகவலை அவரது தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது.
இதுபோன்ற விஷயங்களில் தாம் தலையிடுவதில்லை என்கிறார் ருக்மணி.
