அல்லு அர்ஜுனுடன் இணையப் போகும் சாய் அபயங்கர்

2 mins read
accf2fcd-9385-4479-8e8e-4be57aa51a17
சாய் அபயங்கர். - படம்: ஊடகம்

தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் காட்டில்தான் வாய்ப்பு மழை கொட்டிக்கொண்டே இருக்கிறது.

‘பல்டி’, ‘டியூட்’ ஆகிய படங்களை அடுத்து, ‘கருப்பு’, ‘பென்ஸ்’, ‘மார்ஷல்’ என அவர் தமிழில் மட்டுமே அரை டஜன் படங்களுக்கு இசையமைக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடிக்க, இயக்குநர் அட்லீ இயக்கும் படத்துக்கும் சாய் அபயங்கர்தான் இசையாம். இந்தத் தகவல் அண்மையில் வெளியான போதிலும், படத்தின் தயாரிப்புத் தரப்பு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில், சாய் அபயங்கரின் பிறந்தநாளையொட்டி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அன்று அவருக்கு அட்லீ மற்றும் அவரது குழுவினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அல்லு அர்ஜுனும் தன் பங்குக்கு சமூக வலைத்தளத்தில் சாய் அபயங்கருக்கு வாழ்த்து தெரிவிருந்தார்.

அதில், “என் சகோதரர் எஸ்ஏகேவுக்கு இது மகிழ்ச்சியான நாள். வரும் ஆண்டுகளில் உங்களுக்கு வெற்றியும் பெருமையும் கிடைக்க வாழ்த்துகிறேன்,” என்று தமது பதிவில் அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவரது 22வது படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைப்பது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இசையமைப்பாளர்‘திரைப்படம்பிறந்தநாள் வாழ்த்துகள்பாராட்டு