‘ராமாயணா’ இந்திப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார் சாய் பல்லவி.
அவரும் பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
மேலும் யாஷ், லாரா தத்தா எனப் பலர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இதன் படப்பிடிப்பை மும்பையில் நடத்தி வருகிறார்கள்.
இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சியாக இந்தப் படத்தைக் கருதுவதால், ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்களாம்.
குறிப்பாக, சண்டைக் காட்சிகளை ‘மேட் மேக்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களின் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கய் நோரிஸ் வடிவமைத்துள்ளார்.
“ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ரசிகர்களைத் தங்களுடைய இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்துவிடும். இந்தியத் திரையுலகில் நீண்டகாலம் பேசப்படும் படைப்பாக இந்தப் படம் அமையும்,” என்கிறார்கள் படக்குழுவினர்.