தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடசென்னை பெண் வேடத்தில் சாய் பல்லவி

1 mins read
4051e9ad-13c0-4a2e-842b-5c8051d17bd2
சாய் பல்லவி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சாய் பல்லவி வாய்ப்புகளைத் தேடிச் செல்வதில்லை. தன்னால் அவை தேடி வருகின்றன.

‘அமரன்’ பட வெற்றியை அடுத்து, தெலுங்கில் ‘தண்டேல்’ என்ற படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்தார்.

இந்தியில் ‘ஏக் தின்’ என்ற படத்தை முடித்துவிட்டு, பெரும் பொருள் செலவில் உருவாகும் ராமாயணம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்யத் தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளது.

இதில், சிம்பு கதைப்படி, குண்டர் கும்பல் தலைவனாக நடிக்க, வடசென்னையைச் சேர்ந்த இளம்பெண் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டுத்தான் சாய் பல்லவியை அணுகி இருப்பதாகத் தகவல். அவரும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

மிக விரைவில் படம்குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும். அதன் பின்னர் சாய் பல்லவி சென்னைத் தமிழில் பேசி நடிப்பதைப் பார்த்து, நாம் ரசிக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்