தமிழை அழகாக உச்சரித்து வசனங்கள் பேசும் ஒரு நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து வந்தவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். அங்கு ரூ. 2,000 கோடி செலவில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் சீதாவாக நடித்துள்ளார்.
அந்தப் படத்தைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சாய் பல்லவி கலந்துகொண்டு வருகிறார்.
அப்போது ஒரு நிகழ்ச்சியில் சாய் பல்லவியிடம் அவரது வருங்கால கணவர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘எனக்கு வரப்போகிறவர் எனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் தொழிலையும் மதித்து, என்னோட லட்சியங்களை அடையத் துணையாக இருப்பவராக இருக்கணும்.
“பெண்கள் பொருளியல் ரீதியாக தங்களது வாழ்க்கையை தாங்களே பார்த்துக்கொள்வது அவசியம்னு நினைக்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்வும் சமைக்கத் தெரிந்தவருமாக இருக்கணும், என சாய் பல்லவி தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
