‘ஏக் தின்’ படத்தை அடுத்து, இந்தியில் ‘ராமாயணா’ படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இதில் சீதையாக நடிக்கும் அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் இந்தி ரசிகர்கள் பலர் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
சீதை வேடத்தில் சாய் பல்லவி ‘ராமாயணா’ காவியத்தை அவமதிப்பதுபோல் இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இணையத்தளத்தில், சூர்ப்பணகை நடிக்கும் ரகுல் பிரீத் சிங் போன்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு, சாய் பல்லவி குறித்து எதிர்மறையான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ள இந்தப் படம் தொடர்பான சில காட்சிகள் அண்மையில் வெளியாயின.
இதையடுத்தே, சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துகள் வெளியிடப்பட்டன. ஆனால், சாய் பல்லவியோ விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுவரை தாம் நடித்த படங்களைவிட, ‘ராமாயணா’ படத்துக்காக அவர் அதிகம் மெனக்கெடுவதாக பாலிவுட் திரையுலகத்தினர் கூறுகின்றனர்.

