சாய் பல்லவிக்குத் திருமணம், இனி நடிக்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரோ இந்தித் திரையுலகில் நுழைய வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளாராம்.
இந்தி நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கும் புதுப் படத்தில் அவரது ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி.
அறிமுக இயக்குநர் சுனில் இயக்கும் இந்தப் படத்தை அமீர்கான்தான் சொந்தமாகத் தயாரிக்கிறாராம்.
‘லவ் டுடே’ படத்தின் இந்தி மறுபதிப்பான ‘லவ்யப்பா’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜுனைத் கான்.
சாய் பல்லவி ‘ராமாயணம்’ இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.