நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படம் ‘தண்டேல்’. சந்து மொண்டட்டி இயக்கும் இப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத். கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாகிறது.
இப்படத்துக்காக, சிவராத்திரி பாடல் ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் 1,000 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். நடன இயக்குநர் சேகர் இந்த நடனத்தை மிகவும் பிரம்மாண்டமாக அமைத்ததாகப் டக்குழு தெரிவித்துள்ளது.

